உங்கள் கணக்கை நீக்குதல்
கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது 2 நவம்பர், 2026
Accron Revolutions · Sri Lanka
இது ஆங்கிலக் கொள்கையின் தமிழ் மொழிபெயர்ப்பு. இரண்டுக்கும் இடையில் வேறுபாடு இருந்தால், ஆங்கில வாசகமே செல்லுபடியாகும்.
உங்கள் MrDooD கணக்கை நீங்கள் விரும்பும் எந்த நேரத்திலும் நீக்கலாம்: செயலியில், அல்லது எங்களிடம் கேட்டு.
செயலியில் நீக்குதல்
- MrDooD செயலியைத் திறந்து உள்நுழையுங்கள்.
- கணக்கு, பின்னர் தனியுரிமை என்பதற்குச் செல்லுங்கள்.
- என் கணக்கை நீக்கு என்பதைத் தட்டி, உறுதிப்படுத்துங்கள்.
இது உடனே நடைமுறைக்கு வரும்; நீங்கள் வெளியேற்றப்படுவீர்கள்.
நீக்குமாறு எங்களிடம் கேட்டல்
உங்களிடம் இப்போது செயலியோ கைபேசியோ இல்லையென்றால், support@mrdood.lk க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள், அல்லது 070 708 9899 இல் MrDooD ஐ அழையுங்கள் அல்லது WhatsApp செய்யுங்கள்; கணக்கிலுள்ள கைபேசி இலக்கத்தைத் தெரிவியுங்கள். வேறு எவரும் உங்கள் கணக்கை மூட முடியாதபடி, எதையும் நீக்கும் முன் அந்தக் கோரிக்கையை உங்களுடன் உறுதிப்படுத்துவோம்.
எவை நீக்கப்படுகின்றன
- உங்கள் பெயர், மின்னஞ்சல் முகவரி, கைபேசி இலக்கம்.
- நீங்கள் சேமித்த முகவரிகள்.
- உங்கள் ஆர்டர்களில் நீங்கள் எழுதிய குறிப்புகளும், ஒவ்வொரு ஆர்டரும் சென்ற முகவரியும்.
- உங்கள் கைபேசியின் அறிவிப்புக் குறியீடு (notification token); MrDooD அறிவிப்புகள் நின்றுவிடும்.
- கணக்கில் மீதமுள்ள MrDooD கடன் (credit) அல்லது புள்ளிகளை இனிப் பயன்படுத்த முடியாது.
எவற்றை, எவ்வளவு காலம் வைத்திருக்கிறோம்
- ஆர்டர் பதிவுகள் (பொருட்கள், தொகைகள், திகதிகள்) — உங்கள் பெயர், இலக்கம், முகவரி இல்லாமல் — ஏழு ஆண்டுகள்; வரி மற்றும் கணக்கியல் விதிகள் அதைக் கோருகின்றன.
- உதவிச் செய்திகளும் முறைப்பாட்டுப் புகைப்படங்களும் — இரண்டு ஆண்டுகள்.
பின்னர் அதே கைபேசி இலக்கத்துடன் மீண்டும் பதிவுசெய்யலாம். அது புதிய கணக்காகத் தொடங்கும்.
தொடர்பு
இந்தக் கொள்கை பற்றிய கேள்விகளைத் தொடர்புப் பக்கத்தின் வழியாகவோ, அங்கு வெளியிடப்பட்டுள்ள இலக்கத்துக்கு WhatsApp மூலமோ அனுப்பலாம்.